விக்ரமை தொடர்ந்து கமல்ஹாசன் ரசிகர்களுக்கு காத்திருக்கும் அடுத்த சர்ப்ரைஸ்.!  - Seithipunal
Seithipunal


லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் வெளியான விக்ரம் படத்தின் அபார வெற்றிக்கு பின்னர் நடிகர் கமல்ஹாசனின் ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தில் இருக்கின்றனர். தென்னிந்திய சினிமாவில் இந்த படம் தற்போது வரை நன்றாக ஓடிக் கொண்டுள்ளது. 

அத்துடன் தற்போது கமலஹாசன் ரசிகர்களுக்கு மற்றொரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியிருக்கிறது. கமலஹாசனின் இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு இரண்டு வருட இடைவெளிக்குப் பின் மீண்டும் நடைபெற இருக்கிறது. இந்த படத்தின் சூட்டிங் அடுத்த ஜூலை மாதத்தில் துவங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தியன் 2 படப்பிடிப்பில் 3 பேர் பலியான சம்பவம்.! கமல் மற்றும் சங்கர் மேல்  காவல்துறை காட்டிய அதிரடி .! - Seithipunal

இதுகுறித்த அறிவிப்பை உதயநிதி ஸ்டாலின் டான் சக்சஸ் மீட் நடைபெற்றபோது தெரிவித்துள்ளார். கிரேன் விபத்து ஏற்பட்டதன் காரணமாக கடந்த 2020இல் இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் நிறுத்தப்பட்டது. அதன்பிறகு பல்வேறு சிக்கல்கள் மற்றும் கொரோனா தொற்று காரணமாக படப்பிடிப்பு நடைபெறவில்லை. 

தற்போது பல்வேறு தடைகளுக்கு பிறகு லைகா புரொடக்ஷன் சார்பில் இந்த படத்தின் சூட்டிங் நடைபெற இருக்கிறது. இதில், நடிகர் சித்தார்த், நடிகைகள் பிரியா பவானி சங்கர் மற்றும் ரகுல் ப்ரீத்தி சிங் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

indian 2 shooting may start in july


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->