#BREAKING: தப்பித்தது இந்தியன் 2 - தடை விதிக்க மறுத்த நீதிமன்றம்! - Seithipunal
Seithipunal


இயக்குனர் சங்கர் இயக்கத்தில், நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் விரைவில் திரைக்கு வர உள்ள இந்தியன் 2 திரைப்படத்திற்கு தடை கோரி, வர்மக்கலை தலைமை ஆசான் ராஜேந்திரன் என்பவர், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். 

இந்த வழக்கு இரு தினங்களுக்கு முன் விசாரணைக்கு வந்த போது, இயக்குனர் சங்கர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வர்மக்கலை என்பது ராஜேந்திரனுக்கு சொந்தமானது இல்லை, எனவே அவரின் பெயரை படத்தில் உபயோகப்படுத்த வேண்டிய அவசியமில்லை என்று தெரிவித்திருந்தார்.

நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, இந்தியன் 2 படத்தின் தயாரிப்பாளர் சுபாஷ்கரன், நடிகர் கமல்ஹாசன் தரப்பு வழக்கறிஞர்கள் ஆஜராகவில்லை. 

இதனை அடுத்து அவர்களின் தரப்பு வாதத்தை கேட்காமலேயே உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை எச்சரிக்கை விடுத்தது.

மேலும், நீதியின் நலன் கருதி இந்த வழக்கில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன், நடிகர் கமலஹாசன் தரப்பில் வழக்கறிஞர்கள் ஆஜராக வேண்டும் என்றும், அப்படி ஆஜராகவில்லை என்றால் இயக்குனர் சங்கர் தரப்பில் ஆஜராகும் வழக்கறிஞரின் வாதம், பதில் மனுவை பொறுத்து உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என்றும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில், இந்தியன் 2 படத்திற்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து உள்ளது. இதன்மூலம் இந்தியன்-2 படத்தை வெளியிட தடை இல்லை என்பது உறுதியாகியுள்ளது.

மேலும், வர்ம கலை ஆசான் மதுரை ராஜேந்திரன் தொடர்ந்த வழக்கும்  தள்ளுபடி நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

indian2 shankar kamalhaasan case judgement


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->