இளையராஜா பணத்திற்கு ஆசைப்பட்டு காப்புரிமை கேட்கிறாரா..? உண்மை என்ன..? - Seithipunal
Seithipunal


இசைஞானி இளையராஜா கடந்த 50 ஆண்டுகளாக தமிழ் இசை துறையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். இருப்பினும் அவர்  இசையமைத்த பாடல்களின் காப்புரிமை தொடர்பாக அடிக்கடி சட்டப்போராட்டம் நடத்தி வருகிறார். குறிப்பாக, மஞ்சுமெல் பாய்ஸ் , டிஸ்கோ , தற்போது அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி படக்குழுவுக்கு ஐந்து கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அஜித்தின் 'குட் பேட் அக்லி' படத்தில் இளையராஜா இசையமைத்த மூன்று பாடல்கள் ரீமிக்ஸ் செய்து பயன்படுத்தப்பட்டுள்ளது. தன்னுடைய அனுமதியில்லாமல் தனது பாடல்களை ரீமிக்ஸ் செய்ததற்காக எழுத்துப்பூர்வமாக படக்குழு மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று இளையராஜா தரப்பில் இருந்து வலியுறுத்தப்பட்டுள்ளது. 

அத்துடன், குறித்த மூன்று பாடல்களுக்கான காப்புரிமைக்கு சொந்தமான நிறுவனத்திடம் முறையாக அனுமதி வாங்கிவிட்டோம் என மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பணத்திற்கு ஆசைப்பட்டு இளையராஜா இந்த மாதிரி செய்வதாக பலரும் கருத்து தெரிவிக்கின்றனர். 

இந்நிலையில், இளையாராஜா ஏன் பாடல்களுக்கு உரிமை கேட்கிறார் ? என கேள்வியும் எழுந்துள்ளது. அதாவது, 1957-ஆம் ஆண்டு காப்புரிமை சட்டம் நடைமுறைக்கு வந்தது. குரிப்பாக எழுத்து , இசை , கண்டுபிடிப்பு என ஒருவரின் படைப்பு மற்றும் அவரது அறிவுசார் சொத்துரிமையை பாதுகாக்கும் விதமாக இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தது. அந்தவகையில், சினிமாத் துறையிலும் இந்த சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பு கலைஞர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் தங்கள்  இடையில் பரஸ்பரம் ஒப்பந்தத்தின் அடிப்படையில் இயங்கி வந்தார்கள் .

அதில், ஒரு இசைக்கலைஞர் மற்றும் தயாரிப்பு நிறுவனம் இடையில் தனிப்பட்ட ஒப்பந்தம் இல்லாத பட்சத்தில்  இசைக்கலைஞர்கள் இயற்றிய பாடல்கள் மீது அந்த திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கே  முதல் உரிமையுள்ளது என 1957-ஆம் ஆண்டு காப்புரிமை சட்டம் கூறுகிறது.

ஆனால், இளையராஜா தனது பாடல்களுக்கான உரிமைகளை எந்த ஒரு தனி ஒப்பந்தம் மூலமாகவும் பெற்றுக் கொள்ளவில்லை என கூறப்படுகிறது. ஏ.ஆர். ரஹ்மான் போன்ற இசையமைப்பாளர்கள் தயாரிப்பு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தங்கள் பாடல்களுக்கான காப்புரிமையை கைப்பற்றிக் கொண்டுள்ளார்கள். இவ்வாறு இளையராஜா செய்யாதது மிகப்பெரிய தவறு என்று கூறப்படுகிறது. இதனால், அவருடைய பாடல்கள் மீது அவருக்கே உரிமை மறுக்கப்படுகிறது.

இளையராஜா 1970 முதல் 1990 வரை இசையமைத்த 4500 பாடல்களுக்கான காப்புரிமையை கைப்பற்றவில்லை. இந்த மொத்த பாடல்களின் காப்புரிமை எக்கோ ரெக்கார்டிங் என்கிற தனியார் நிறுவனம் வைத்துள்ளது. இந்நிலையில், இளையராஜாவே நினைத்தாலும் இந்த பாடல்களை இன்னொரு முறை பயண்படுத்த இந்த தனியார் நிறுவனத்திடம் அனுமதி கேட்கவேண்டும் என சட்டம் சொல்கிறது. 

இந்நிலையில், சமீபத்தில் இளையராஜாவின் என் இனிய பொன் நிலாவே பாடலை அவரது மகன் யுவன் ஷங்கர் ராஜா பயண்படுத்தி இருந்தார். இந்த பாடலை அனுமதி இல்லாமல் பயண்படுத்தியதாக சாரிகாமா நிறுவனம் டெல்லி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து இருந்தது.

மேலும், தான் இசையமைத்த பாடலை இன்னொரு படத்தில் பயண்படுத்துவதற்கான அனுமதி வழங்கும் உரிமை இளையராஜாவுக்கு கிடையாது என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அத்துடன், அந்த பாடலை பயன்படுத்த  ரூ.20 லட்சம் கேட்டுள்ளது அந்த நிறுவனம்.

சட்டரீதியான குழப்பத்தால் இன்று ஒரு கலைஞருக்கு அவரது சொந்த படைப்பின் மீதான உரிமை மறுக்கப்படுகிறன்ற நிலையில் இளையராஜ் காப்புரிமை கேட்பது தனக்காகவா..? அல்லது பணத்திற்கு ஆசைப்பட்டா..? உலகம் முழுவதும் கார்பரேட் நிறுவனங்களால் அடையாளத்தை இழந்து வரும் எண்ணற்ற கலைஞர்களுக்காகவா என கேள்வி எழுந்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Is Ilayaraja greedy for money and asking for copyright


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->