புஷ்பா பட இயக்குனர் & தயாரிப்பாளர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை.! - Seithipunal
Seithipunal


தெலுங்கு சினிமாவில் பிரபல இயக்குனராக இருப்பவர் சுகுமார். இவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான புஷ்பா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதனைத் தொடர்ந்து தற்போது புஷ்பா இரண்டாவது பாகம் தயாராகி வருகிறது.

இந்த படத்தில் அல்லு அர்ஜுன் ஹீரோவாகவும், நடிகை ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்கிறார். இந்த படத்தை மைத்ரி மூவிஸ் மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த நிலையில் இன்று காலை முதல் ஹைதராபாத்தில் உள்ள மைத்ரி மூவிஸ் மேக்கர்ஸ் நிறுவனம் மற்றும் அதற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

மேலும், புஷ்பா படத்தின் இயக்குனர் சுகுமார் வீடு மற்றும் அலுவலங்களிலும் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். ஹவாலா பணத்தை பண பட்டுவாடா செய்ததாக வந்த தகவலின் அடிப்படையில் சோதனை நடத்துவதாக கூறப்படுகிறது. இந்த சோதனை தெலுங்கு திரையுலகில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IT raid in pushpa movie director and producer house and office


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->