700 கோடி வசூல் செய்த ஜவான் - ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய படக்குழுவினர்.! - Seithipunal
Seithipunal


700 கோடி வசூல் செய்த ஜவான் - ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய படக்குழுவினர்.!

பிரபல இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவான திரைப்படம் 'ஜவான்'. இந்தத் திரைப்படத்தில், ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இவர்களுடன் ப்ரியாமணி, விஜய் சேதுபதி, தீபிகா படுகோனே உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

அனிருத் இசையமைத்துள்ள இந்தத் திரைப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் உலகம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது. 

இதுவரைக்கும் இந்தப் படம் 700 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், இந்த படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில், சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. 

அந்த நிகழ்ச்சியில், ஷாருக்கான், அட்லீ, தீபிகா படுகோன், அனிருத், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் பங்கேற்று படத்தின் வெற்றியை ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடினர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

jawan team celebrate collection of 700 crores


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->