ஜெயம் ரவி, நயன்தாரா படத்தின் அசத்தல் அப்டேட்.. உற்சாகத்தில் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக நடிகர் ஜெயம் ரவி இருக்கின்றார். இவர் ஜெயம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார்.எனவே தான் எப்பொழுதும் அவரை ஜெயம் ரவி என்று ரசிகர்கள் அழைத்தனர். 

அதனைத் தொடர்ந்து இவர் நடித்த எம் குமரன், தாம் தூம், தீபாவளி, சம்திங் சம்திங் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மாறியுள்ளார்.

இவரது நடிப்பில் கடைசியாக வெளியான பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து ஜெயம் ரவி எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார்.

இதனிடையே இயக்குனர் அகமது இயக்கத்தில் ஜெயம் ரவி ‘இறைவன்’ படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இந்த நிலையில் இறைவன் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 25ம் தேதி திரையரங்குகளின் வழியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் ஹிந்தி என 4 மொழிகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த நிலையில் நடிகர் ஜெயம் ரவி தனது ட்விட்டர் பக்கத்தில் "இத்திரைப்படம் உங்களை ஆச்சர்யப்படுத்தும்" என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jayam ravi in iraivan movie release on August 15


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->