தண்டவாளத்தில் சிக்கிய லாரி மீது மோதிய ரெயில் - பயணிகளின் நிலை என்ன?
train and lorry accident in maharastra
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஜல்கான் மாவட்டம் போட்வாட் ரெயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த லாரி ஒன்று திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து ரெயில் செல்வதற்கு அமைக்கப்பட்டிருந்த கிராசிங் கேட் மீது மோதி தண்டவாளத்தில் சிக்கியது.
அந்த நேரத்தில் அந்தப்பகுதியாக வந்த அமராவதி எக்ஸ்பிரஸ் ரெயிலின் லோகோ பைலட் தண்டவாளத்தில் லாரி நிற்பதைக்கண்டு ரெயிலின் வேகத்தை குறைத்தார். இருப்பினும் ரெயில் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்து குறித்து தகவலறிந்த ரெயில்வே காவல்துறை மற்றும் ரெயில்வே பாதுகாப்புப் படை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்டவாளத்தை சரிசெய்யும் பணியைத் தொடங்கினர். ரெயிலின் லோகோ பைலட் சரியான நேரத்தில் ரெயிலின் வேகத்தை குறைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
train and lorry accident in maharastra