காடுவெட்டி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.‌.அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட படக்குழு.! - Seithipunal
Seithipunal


ஆர்கே சுரேஷ் நடித்துள்ள காடுவெட்டி திரைப்படம் மே மாதம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

அறிமுக இயக்குனர் சோலை ஆறுமுகம் இயக்கத்தில் பிரபல தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ஆர்கே சுரேஷ் நடித்து வரும் திரைப்படம் காடுவெட்டி. இந்தத் திரைப்படம் உண்மை கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி ஜெயங்கொண்டம் அருகே உள்ள காடுவெட்டி என்னும் கிராமத்தில் பிறந்து, பின் மறைந்த வன்னியர் சங்கத் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ஜெ.குருநாதன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. 

இவர் அரியலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 7 அம்பேத்கர் சிலைகளை திறக்க காரணமாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தேநீர் கடைகளில் இரட்டை குவளை முறையை ஒழித்துள்ளார். இவருக்கு மாவீரன் என்ற சிறப்புப்பெயரும் உண்டு.

இந்த நிலையில் ஏற்கனவே காடுவெட்டி திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், தற்போது, இந்த படம் மே மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என இயக்குனர் சோலை ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kaduvetti movie release on may month


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->