ரூ.1000 கோடிக்கும் அதிகமாக... வெளியான ''கல்கி 2898 ஏடி'' திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ வசூல்.!
Kalki 2898 AD movie collection released
நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ''கல்கி 2898 ஏடி''. இந்தத் திரைப்படம் கலந்த ஜூன் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த திரைப்படத்தில் கமலஹாசன், அமிதாப்பச்சன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதனால் இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துக் கொண்டே இருந்தது.
மகாபாரதம், ஏஐ தொழில்நுட்பம், கல்கி அவதாரம் என புராண கதைகள் உடன் எதிர்கால கற்பனை கதையாக உருவான இந்த திரைப்படம் தொழில்நுட்ப ரீதியாக பாராட்டுகளை பெற்றுள்ளது.
இந்த திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர நாளை முன்னிட்டு அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் கல்கி 2898 திரைப்படம் உலக அளவில் ரூ. 1000 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக பட குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
English Summary
Kalki 2898 AD movie collection released