1000 கோடியை நெருங்கும் கல்கி - வரலாற்று சாதனை படைக்குமா? - Seithipunal
Seithipunal


நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் கதாநாயகனாக நடித்துள்ள படம், 'கல்கி 2898'. இந்தப் படத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி, அன்னா பென் உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ள இந்தப் படத்தை வைஜெயந்தி மூவிஸ் தயாரித்துள்ளது. 

இந்தப் படம் கடந்த ஜூன் மாதம் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. கமல்ஹாசனின் தோற்றமும் பெரிதும் பாராட்டுகளைப் பெற்று வருகின்றன. இந்த நிலையில், உலகளவில் 'கல்கி 2898 ஏடி' திரைப்படம் ரூ.900 கோடியை தாண்டியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. 

இன்னும் சில நாள்களில் ரூ.1000 கோடியைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பு பிரபாஸ் நடிப்பில் வெளியான பாகுபலி, பாகுபலி 2, சலார், ஆதி புருஷ் ஆகிய படங்களுக்கு இந்தியா முழுவதும் வரவேற்பு கிடைத்தது. 

வைஜெயந்தி மூவீஸ் நிறுவனம் தனது பொன்விழா ஆண்டைக் கொண்டாடும் விதமாக இந்தியாவில் இதுவரை செலவிடப்படாத அளவிற்கு பொருட் செலவு செய்து 'கல்கி 2898 ஏ.டி' படத்தினை தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kalki movie cross 900 crores collection


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->