சர்சையைக் கிளப்பிய கமல்ஹாசனின் தக் லைஃப்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் கமல்ஹாசன் இன்று தனது 68வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அதனை முன்னிட்டு ‘இந்தியன்2’, ‘KH 234’ உள்ளிட்ட படங்களில் இருந்து அடுத்தடுத்து அப்டேட்களை படக்குழுவினர் கொடுத்து வருகிறார்கள். 

அதில், நேற்று நடிகர் கமல்ஹாசன் - மணி ரத்னத்துடன் ‘நாயகன்’ படத்திற்குப் பிறகு இணையும் 234 வது படத்தின் தலைப்பு ‘தக் லைஃப்’ என்று அறிவித்ததுடன், அதன் அறிமுக டீசரும் வெளியானது. 

இந்த டீசரில், கமல்ஹாசன் ரங்கராய சக்திவேல் நாயக்கர் என்று அறிமுகமாகிறார். அதனால், சாதிப்பெயரை சொல்கிறார் கமல்ஹாசன் என சர்ச்சை கிளம்பியுள்ளது. மேலும், ஆங்கிலத்தில் தலைப்பு வைத்ததும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இன்னொரு தரப்பினர் ‘நாயகன்’ படத்தின் இரண்டாம் பாகமா இது? எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

இந்த டீசர் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான ‘ரைஸ் ஆஃப் தி ஸ்கை வாக்கர்’ என்ற ஹாலிவுட் படத்தில் இடம்பெற்ற காட்சிகளைப் போலவே,  அமைந்திருப்பதால் அந்தப் படத்தின் காப்பியா என்ற சர்ச்சையும் இதைச் சுற்றி தற்போது எழுந்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

kamakhaasan thug life movie intro teaser released


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->