அய்யய்யோ!!! 5 ஆண்டுகளில் 100 புலிகளா! விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்...!
The shocking information revealed during the investigation 100 tigers in 5 years
புலிகளைப் பாதுகாப்பதில் இந்தியநாடு வெற்றிப் பெற்றிருந்தாலும், சில இந்தியர்களால் வேட்டையாடுதல் ஒரு முக்கியமான அச்சுறுத்தலாகவே உள்ளது. மேலும் சில இடங்களில் புலிகளை வேட்டையாடும் சம்பவமும் அவ்வப்போது நடக்கிறது. இதற்காக 'தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம்' ஒரு சிறப்பு குழு ஒன்றை நியமித்துள்ளது.
இதில் மஹாராஷ்டிரா வனத்துறையின் சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) வன விலங்குகள் வேட்டையாடுதல் மற்றும் கடத்தல் தொடர்பாக விசாரணை நடத்தியது. இதனால்,நாட்டிலுள்ள வேட்டைக் கும்பல்கள் குறிப்பாகப் பஹேலியா மற்றும் பவேரியா சமூகங்களைச் சேர்ந்தவர்கள் பற்றி அதிர்ச்சி தகவல்கள் தெரியவந்தது.

இந்தக் கும்பல், கடந்த 5 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் 100க்கும் மேற்பட்ட புலிகளின் மரணத்திற்குக் காரணம் காரணம் என்பது தெரியவந்துள்ளது.கடந்த 2020ம் ஆண்டு முதல் ஜனவரி 2025ம் ஆண்டு வரை 41 புலிகள் மற்றும் 55 சிறுத்தைகள், மஹாராஷ்டிராவில் மட்டும் வேட்டையாடுதல் காரணமாக இறந்துள்ளன.
இது தொடர்பாக 2024ம் ஆண்டில் மட்டும் ஏராளமான வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது. இருந்தாலும், உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லாததால், கொல்லப்பட்ட புலிகளின் சரியான எண்ணிக்கையைத் தீர்மானிப்பது சவாலாக இருப்பதாக வன அதிகாரிகள் அதிர்ச்சி தகவலைத் தெரிவித்தனர்.
இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கத்யன், எகிலால் மற்றும் சூர்யா ஆகிய மூன்று முக்கிய சந்தேக நபர்களை வன அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.அவர்கள் இன்னும் தலைமறைவாக உள்ளனர் என்றும் புலிகளின் உடல் பாகங்களைச் சட்ட விரோதமாக வர்த்தகம் செய்வதில் இந்த நபர்கள் முக்கிய நபர்களாக இருந்துள்ளனர் என்றும் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
இதுபோன்ற காரியங்களால் உணவு சங்கிலி பாதிக்கப் படுமென்று தெரிந்தும் மனிதர்கள் இவ்வாறு செய்வது வருத்தமளிக்கிறது என்றும் தெரிவித்துள்ளனர்.
English Summary
The shocking information revealed during the investigation 100 tigers in 5 years