குஷி!மீண்டும் மழை பெய்ய வாய்ப்பு! 17-ம் தேதி முதல் 3 நாட்களுக்கு...
Chance of rain again For 3 days from the 17th
சென்னை வானிலை ஆய்வு மையம், தமிழ்நாட்டில் வரும் 17-ம் தேதி முதல் 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் செய்திக்குறிப்பு தற்போது வெளியிட்டுள்ளது.

அதில் கூறியிருப்பதாவது,"தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகம் நோக்கி வீசும் கிழக்கு திசைக் காற்றில் நிலவும் வேகமாறுபாடு காரணமாக வரும் 17, 18, 19-ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மேலும் வரும் 20-ம் தேதி வறண்ட வானிலை நிலவக்கூடும்.தமிழகத்தில் இன்று முதல் வரும் 18-ம் தேதி வரை சில இடங்களில் வழக்கத்தைவிட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பநிலை உயரக்கூடும்.
இன்று வட தமிழத்திலும், வரும் 16, 17-ம் தேதிகளிலும் தமிழகத்திலும் சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை காரணமாக அசவுகரியம் ஏற்படலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மழைக்கு வாய்ப்பில்லை. மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Chance of rain again For 3 days from the 17th