ரகசியத்தை ஒரே நொடியில் போட்டுடைத்த கமல்!  - Seithipunal
Seithipunal


சங்கர் இயக்கத்தில் கமலஹாசன் தற்போது 'இந்தியன் 2' படத்தில் நடித்துள்ளார். இதில் சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி சங்கர் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

அனிருத் இசையமைக்கும் இந்த திரைப்படத்தை லைக் நிறுவனம் தயாரிக்கிறது. சமீபத்தில் இந்த திரைப்படத்தின் அறிமுக வீடியோ வெளியாகி ரசிகர்கள் இடையே கவனத்தை பெற்றது. 

இதனை அடுத்து 'இந்தியன் 2' படப்பிடிப்பில் படமாக்கப்பட்ட காட்சிகள் அதிகம் இருப்பதால் இரண்டாம் பாகம் வெளியிட பட குழு திட்டமிட்டு இருப்பதாகவும் விரைவில் 'இந்தியன் 3' திரைப்படம் வெளியாகும் எனவும் தகவல் நிலவியது. 

மேலும் கமல் 'இந்தியன் 3' திரைப்படத்திற்காக கூடுதலாக 40 நாட்கள் கால் சீட் கொடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாக்கியது. 

இந்நிலையில் இந்தியன் 3 திரைப்படம் உருவாக உள்ளதை நடிகர் கமலஹாசன் உறுதி செய்துள்ளார். இது தொடர்பாக பேசிய கமல், 'இந்தியன் 2', 'இந்தியன் 3' வெளியாகும் போது அது ஒரு அரசியல் மேடையாக மாறும். 

அதனை எல்லாம் சந்திக்க வேண்டும். அதில் செய்திகள் இருக்கின்றன என தெரிவித்துள்ளார். இதன் மூலம் 'இந்தியன் 3' வெளியாகும் என உறுதி செய்யப்பட்டு ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பிலும் உற்சாகத்திலும் உள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kamal Haasan speech goes viral


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->