பிக் பாஸை விட்டு வெளியேறுகிறாரா கமல்? - குழப்பத்தில் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


தமிழில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் ஆரம்பமானது முதல் தற்போது வரை பரபரப்பாக்க நடைபெற்று வருகிறது. முதல் சீசனில் இருந்து ஏழு சீசன் வரையுமே இந்த நிகழ்ச்சியை கமல்தான் தொகுத்து வழங்கி வருகிறார். 

தற்போது இந்த சீசனில் வினுஷா குறித்து நிக்சன் உருவகேலி செய்ததை கமல் தட்டிக் கேட்காமல் போனது, பிரதீப் விஷயத்தில் அவரை பேச விடாமல் ரெட் கார்டு கொடுத்தது, போன வாரம் நிக்சன் - அர்ச்சனா விஷயத்தில் ஒருதலைபட்சமாக செயல்பட்டது என்று கமல் மீது ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

இதேபோல் ஒவ்வொரு சீசனிலும் கமல் மீது அதிருப்தி வருவதனால், கமல் பிக் பாஸை விட்டு விலக வேண்டும் என்றும் அவருக்குப் பதிலாக சிம்புவே வர வேண்டும் என்றும் ரசிகர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், கமலுக்கு தனது அரசியல் வாழ்வு பாதிக்கப்படுமோ என்ற எண்ணம் எழுந்துள்ளதாகவும் இந்த சீசனோடு அவர் பிக் பாஸை முடித்துக் கொள்வார் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால், இது எந்த அளவுக்கு உண்மையான தகவல் என்று தெரியவில்லை.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kamal leave bigg boss season 7


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->