பிக் பாஸில் இருந்து விலகுகிறாரா கமல்? வெளியான அதிர்ச்சி தகவல்! - Seithipunal
Seithipunal


நடிகர் கமல்ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி அக்டோபர் 1ஆம் தேதி தொடங்கியது. 

பிக் பாஸ் தமிழை பொறுத்தவரை கடந்த 6 சீசன்களாக நடிகர் கமல் தொகுத்து வழங்குவதால் ரசிகர்கள் பலரும் உற்சாகத்துடன் பார்த்து வருகின்றனர். 

பலமுறை ரசிகர்கள் கமலின் முடிவுகளை பாராட்டியுள்ளனர். இந்த நிகழ்ச்சி மூலம் கமலுக்கு பெரிய அளவில் வருமானம் கிடைத்தாலும் பல்வேறு கருத்துக்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் ஒரு மேடையாக பயன்படுத்தி வருகிறார். 

ஆனால் பிக் பாஸ் சீசன் 7 கமல்ஹாசனின் பல்வேறு முடிவுகள் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்நிலையில் ரசிகர்களின் எதிர்ப்பை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் கமலஹாசன் விலகப் போவதாக சமூக ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது. 

இருப்பினும் இது குறித்து கமலஹாசன் தரப்பிலிருந்து எந்த ஒரு விளக்கமும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kamal leaving Bigg Boss


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->