தாளம்போடும் கமல்ஹாஸன்.. வைப் பன்னும் ரசிகர்கள்.! வைரல் வீடீயோ.! - Seithipunal
Seithipunal


இந்திய சினிமாவில்  மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருப்பவர் கமல்ஹாசன். சினிமாவில் இவரால் சாதிக்க முடியாத  ஒரு துறை எதுவுமே இல்லை என்று கூறலாம். அந்த அளவிற்கு சகல துறைகளிலும் தன்னுடைய ஆற்றலை நிரூபித்தவர். தற்போது சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்தத் திரைப்படத்திற்காக இசை கருவி ஒன்றை வாசிப்பதை போல வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் கமல். இசைக்கருவிகளை வாசிப்பது கமலுக்கு ஒன்றும் புதிதல்ல அபூர்வ ராகங்கள் படத்திற்காக மிருதங்கம் வாசிப்பது போன்ற காட்சிக்கு ஒரு வருடம் மிருதங்கம் பயிற்சி பெற்றவர் கமல் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் வயலின், புல்லாங்குழல் போன்ற இசைக்கருவிகளையும் கற்று தேர்ச்சி பெற்றிருக்கிறார். விக்ரம் படம் பிரமோசனின் போது கூட கேரளாவில் செண்டை மேளம் அடித்து ரசிகர்களை கவர்ந்தவர். இப்படி சினிமாவில் உலகநாயகன் கைப்படாத துறைகளே இல்லை எனக் கூறலாம்.

அந்த வகையில் தற்போது மிருதங்கம் போன்ற அமைப்பில் இருக்கும் வரிசை கருவியை இசைப்பதை போன்ற  வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் ரிதம் செக்சன் எனவும்  பதிவிட்டு இருக்கிறார். இந்த வீடியோவை வைரல் செய்து வரும் அவரது ரசிகர்கள்  அந்த இசை கருவியின்பெயரைச் சொல்லுமாறு கமலுக்கு வேண்டிக் கொள் வைத்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kamal released a video from indian 2 shooting spot goes viral


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->