ஓடிடியில் வெளியானது அருள்நிதியின் "கழுவேத்தி மூர்க்கன்" திரைப்படம்.! - Seithipunal
Seithipunal


ஓடிடியில் வெளியானது அருள்நிதியின் "கழுவேத்தி மூர்க்கன்" திரைப்படம்.!

சை கௌதம் ராஜ் இயக்கத்தில் உருவான படம் ‘கழுவேத்தி மூர்க்கன்’. இந்த படத்தில் அருள்நிதி கதாநாயகனாகவும், துஷாரா விஜயன் கதாநாயகியாகவும் நடித்துள்ளார்கள். 

அம்பேத் குமார் தயாரித்துள்ள இப்படத்தில் சந்தோஷ்பிரதாப், முனிஷ்காந்த், யார்கண்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். 

இந்த படம் கடந்த மே 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றது. கிராமத்தில் சாதியை வைத்து நடக்கும் அரசியலை பேசிய இப்படத்தில் சந்தோஷ் பிரதாப் கதாபாத்திரங்களின் வடிவமைப்பு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. 

இந்த நிலையில், "கழுவேத்தி மூர்க்கன் " திரைப்படம் வரும் ஜூன் 23-ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.

அதன் படி இந்தப் படம் நேற்று அமேசான் பிரைமில் வெளியாகியுள்ளது. இனி ரசிகர்கள் தங்கள் செல்போனிலேயே கழுவேத்தி மூர்க்கன் படத்தை கண்டு ரசிக்கலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kazhuveththi moorkkan movie release amezon ott prime


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->