பேரதிர்ச்சியில் திரையுலகம்! நடிகர் நிவின் பாலி மீது பாலியல் புகார்!  - Seithipunal
Seithipunal


கேரள திரையுலகில் நடிகைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து விசாரிக்க, முன்னாள் நீதிபதி ஹேமா தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. 

கடந்த 2019-ம் ஆண்டு இந்த ஆணையம் தனது விசாரணை அறிக்கையை கேரள முதல்வரிடம் அளித்த நிலையில், தற்போது தகவல் உரிமை சட்டத்தின்கீழ் ஆணையத்தின் அறிக்கையில் உள்ள தகவல்கள் வெளியாகின.

இது நாடு முழுவதும் உள்ள திரைத்துறையை சேர்ந்தவர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில், தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நடிகர்கள் மீது நடிகைகள் புகார் கொடுக்க தொடங்கினர்.

இதில், இயக்குநர் ரஞ்சித், நடிகர் சித்திக், மணியன் பிள்ளை ராஜு, இடைவேளை பாபு, ஜெயசூர்யா, நடிகரும், கொல்லம் தொகுதி மார்க்சிஸ்ட் எம்எல்ஏவுமான முகேஷ், பாபுராஜ், ரியாஸ் கான் மீதும் புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், இதனை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை கேரளஅரசு அமைத்தது. 

இந்நிலையில், பிரபல கேரள திரைப்பட நடிகர் நிவின் பாலி (பிரேமம்) மீது பெண் ஒருவர் பாலியல் புகார் கொடுத்து இருப்பது பெரும் அதிர்ச்சியாயி ஏற்படுத்தியுள்ளது.

மேலும், அந்த பெண்ணின் புகாரின் அடிப்படையில் நடிகர் நிவின் பாலி மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kerala Nivin Pauly Abuse case file


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->