"வாரிசு திரைப்படத்தால் நஷ்டம்" - நடிகர் விஜயிடம் கதறிய டிஸ்ட்ரிபியூட்டர்!
kerala varisu movie loss issue Actor Vijay
வாரிசு திரைப்படத்தால் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், தனது நஷ்டத்தை ஈடுகட்ட அட்வான்ஸ் தொகையை திரும்பப் பெற்றுத் தர வேண்டும் என்று, நடிகர் விஜய்க்கு கேரளாவை சேர்ந்த டிஸ்ட்ரிபியூட்டர் கடிதம் எழுதியுள்ள சம்பவம், தமிழ் திரை உலகில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் திரை உலகின் அடுத்த 'சூப்பர் ஸ்டார்' என்ற இலக்கோடும், 'வசூல் மன்னன்' என்ற தடத்தை பதிக்கவும் நடிகர் விஜய்யின் ஒவ்வொரு செயல்பாடுகளும் இருந்து வருகிறது.
அண்மையில் வெளியான பீஸ்ட், வாரிசு திரைப்படங்கள் வசூல் ரீதியாக வெற்றி படமாக அமைந்த போதிலும், விமர்சன ரீதியாக பல்வேறு தாக்குதலுக்கு இந்த இரண்டு படங்களும் ஆளானது.
![](https://img.seithipunal.com/media/varisu-dwm6c.png)
குறிப்பாக வாரிசு திரைப்படம் சீரியல் போல் உள்ளதாகவும், நடிகர் விஜயின் நடிப்பு மோசமாக இருந்ததாகவும், பல்வேறு தரப்பிலிருந்தும் கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டன.
விஜய்க்கு ரசிகர்களின் ஆதரவு காரணமாக வாரிசு படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்ற நிலையில், கேரளாவில் இந்த படத்தை விநியோகம் செய்த ராய் அகஸ்டின் என்பவர், தனக்கு நஷ்டம் ஏற்பட்டதாகவும், படத்துக்கு தான் கொடுத்த கூடுதல் அட்வான்ஸ் தொகையை திரும்ப பெற்றுத் தருமாறு, நடிகர் விஜய்க்கு கடிதம் எழுதி உள்ளார்.
![](https://img.seithipunal.com/media/varisu 1-ch2rl.png)
மேலும் தான் கொடுத்த பணத்துக்கு ஜிஎஸ்டி செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்திருப்பதாகவும் அவர் அந்த கடிதத்தில் குற்றம் காட்டி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
English Summary
kerala varisu movie loss issue Actor Vijay