ரூ.440 கோடியை திருடி, கொள்ளையடித்த தயாநிதிமாறன்... கொஞ்சம் கூட வெட்கமேயில்லாமல்... பாஜக நாராயணன் கடும் விமர்சனம்!
BJP Narayanan Condemn to DMK MP Dhayanithimaran
பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "தொலைபேசி இணைப்பகத்தை திருடி, BSNL ஐ கொள்ளையடித்த அமைச்சர்"
வரி செலுத்தும் மக்கள் பணம் ரூபாய். 440 கோடியை திருடி, கொள்ளையடித்து, வீணடித்ததாக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் தினசரியில் ஜூன், 2, 2011ல் வெளிவந்த தலைப்பு செய்தி தான் மேற்கண்ட தலைப்பு.
அந்த அமைச்சர் யார் தெரியுமா? நேற்று பாராளுமன்றத்தில் ஸமஸ்க்ரிதத்தில் மொழிபெயர்ப்பது வரி செலுத்துபவர்கள் பணத்தை வீணடிப்பதாகும் என் பேசிய தயாநிதி மாறன் தான்.
கொஞ்சம் கூட வெட்கமேயில்லாமல் மக்கள் வரிப்பணம் குறித்து பேசுவது தான் திராவிட மாடல்!
மக்களவை நடவடிக்கைகளை ஸமஸ்க்ரிதத்தில் மொழிபெயர்ப்பது ஏன் என்று கேள்வி கேட்ட திமுகவின் தயாநிதி மாறன் அவர்களுக்கு இன்று மக்களவை சபாநாயகர் அளித்த பதில் சிறப்பானது. ஒன்றும் தெரியாமல், அராஜகமாக வாய்க்கு வந்ததை பேசும் வழக்கமுள்ள தயாநிதி மாறனுக்கு இன்று 'வகுப்பு' எடுத்தார் சபாநாயகர் என்றே சொல்ல வேண்டும்.
"எந்த நாட்டில் இருக்கிறீர்கள் தெரியுமா? இது பாரத நாடு, ஸமஸ்க்ரிதம் இந்தியாவின் முதன்மை மொழியாக இருந்தது, தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளில் பாராளுமன்ற விவாதங்கள் மொழி பெயர்க்கப்படுகிறது, ஹிந்தியையும், ஸமஸ்கிரிதத்தையும் ஏன் எதிர்க்கிறீர்கள்?" என்று கூறினார்.
'தயாநிதி' என்ற பெயரே ஸ்மஸ்க்ரித பெயர் தான், அதை மாற்றிக் கொண்டு இனி ஸமஸ்க்ரிதம் குறித்து தயாநிதி மாறன் பேசட்டும். ஆக்கபூர்வமான வாதங்களை முன்வைக்காமல் தொடர்ந்து மொழிகளின் மீது வெறுப்பை உமிழும் வழக்கத்தை நிறுத்தி கொள்வது தான் நல்ல தமிழனுக்கும், தமிழுக்கும் பெருமை. தமிழ் தான் உலகின் மூத்த மொழி, இனிய மொழி என்பதில் நமக்கு எந்த சந்தேகமும் இல்லை, ஆனால், மற்ற மொழிகளை இழித்து பேசுவது வெறுப்பின், வன்மத்தின் உச்சக்கட்டம். இது தான் திராவிட மாடலா? என்று நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
English Summary
BJP Narayanan Condemn to DMK MP Dhayanithimaran