அண்ணாமலையிடம் உதவி கேட்டஅன்பில் மகேஷ்! நீங்களே தமிழகத்திற்கு நிதி பெற்றுத் தரலாம்! - Seithipunal
Seithipunal


அடிக்கடி டெல்லி செல்லும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழக பள்ளி மாணவர்களுக்கு நிதி பெற்றுத் தரலாமே என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பேசியுள்ளார்.

நேற்று அமைச்சர் விடுத்த செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறைக்கு ஒன்றிய அரசின் Samagra Shiksha திட்டத்தின் கீழ் 2024-2025 ஆண்டில் 3 தவணைகளாக வழங்கப்பட வேண்டிய நிதியில் முதல் தவணை கூட இன்றுவரை விடுவிக்கப்படவில்லை. இதை சுட்டிக்காட்டினால், நாம் பொய்யைப் பரப்புவதாகவும், 2024-2025ஆம் ஆண்டிற்கான நிதியை ஒன்றிய அரசு எந்த மாநிலத்திற்கும் இன்னும் விடுவிக்கவே இல்லை என்றும் சிலர் சொல்கிறார்கள்.

ஆனால், ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள தரவுகளின்படி, எந்தெந்த மாநிலங்களுக்கு மூன்று தவணைகளாக 2024 - 2025'ஆம் ஆண்டிற்கான நிதி விடுவிக்கப்பட்டு இருக்கிறது என்பது தெளிவாகிறது. அதில் "தமிழ்நாடு" இல்லை. 

போகிற போக்கில் பொய் சொல்லிவிட்டு, அதில் அம்பலப்படும்போது அதுகுறித்த எந்த சஞ்சலமும் இல்லாமல் அடுத்த பொய்யால் ஈடுகட்ட நினைப்போரை மக்கள் நன்கு அறிந்தே வைத்திருக்கிறார்கள். தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் வகையில் அரசியல் செய்வதை இனியாவது அவர்கள் கைவிடவேண்டும்" என்று அண்ணாமலைக்கு மறைமுகமாக சுட்டிக்காட்டி இருந்தார்.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்தாமைச்சர் அன்பில் மகேஷ், "பள்ளிக்கல்வித்துறை தொடர்பாக ஆளுநர், அண்ணாமலை அறிக்கை வெளியிட்டு வருகின்றனர். அடிக்கடி செல்லும் அண்ணாமலை தமிழகத்தின் 40 லட்சம் பள்ளி மாணவர்களுக்கு ஒருங்கிணைந்த திட்டத்தில் நிதி பெற்றுத் தரலாமே" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

CMK Minister Anbil Mahesh request to BJP Annamalai


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->