கோவை | பாடகர் சங்கர் மகாதேவன் கலந்து கொண்டு பாடிய இசை நிகழ்ச்சி! - Seithipunal
Seithipunal


கோவையில் நேற்று முன்தினம் பிரபல பாடகர் சங்கர் மகாதேவன் கலந்து கொண்டு பாடிய இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த  நிகழ்ச்சிக்கு பல்வேறுக் கணக்கான இசை பிரியர்கள் நேரில் சென்று ரசித்தனர்.

இந்த இசை நிகழ்ச்சியை ஆதித்யா கல்வி குழுமம், மௌன ராகம் முரளி, அருண் ஈவென்ட்ஸ், டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் பவுண்டேஷன் நிர்வாக அறங்காவலர் டாக்டர் எஸ்.ரூபன் உட்பட பலர் இணைந்து நடத்தினர்.

ரவி முருகையாவின் ‘தாய் மண்ணே’ வழங்கும், சங்கர் மகாதேவன் கலந்து கொண்ட இந்த இசை நிகழ்ச்சி கோவையில் உள்ள ஆதித்யா தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

4 மணி நேரம் இடைவிடாமல் நடைபெற்ற இந்த இசை நிகழ்ச்சியில், திரைப்பட பாடல்கள் பக்தி பாடல்கள் உட்பட பல பாடல்களை சங்கர் மகாதேவன் பாடினார்.

குறிப்பாக அவர் பாடிய தாய் மண்ணே வணக்கம் என்ற பாடல் ரசிகர்களிடையே நல்ல உற்சாகத்தையும் வரவேற்பையும் பெற்றது. இந்த இசை நிகழ்ச்சியில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் கலந்து கொண்டு ரசித்தனர்  என்பது குறிப்பிடத்தக்கது.

தாய் மண்ணே’ பாடல் குறித்து வாஸன் எஸ்டேட்ஸ் நிறுவனர், உரிமையாளர் ரவி முருகையா கூறும்போது, கார்கில் போரில் உயிரிழந்த இந்திய ராணுவ வீரர்களை நினைவு கூறும் வகையில் 2000ம் ஆண்டில் தாய் மண்ணே என்ற பாடலை நான் எழுதினேன். இந்த பாடலை தமிழில் , தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசனும் இந்தியில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீரும் வெளியிட்டனர்.

இரண்டு மொழிகளிலும் சுமார் 40 லட்சம்  பார்வையாளர்கள் யூட்யூபில் இதுவரை பார்த்து உள்ளனர். வரும் நாட்களில் தெலுங்கு, கன்னடம் ஆகிய 2 மொழிகளிலும் ஒலிப்பதிவு செய்யப்பட உள்ளது” என்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kovai Shankar Maha deavan music


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->