லெஜண்ட் சரவணனின் புதிய திரைப்படத்தின் அப்டேட்! - Seithipunal
Seithipunal


நடிகர் லெஜன்ட் சரவணன் நடிக்கும் புதிய திரைப்படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரங்களில் நடித்த லெஜன்ட் சரவணன் 'தி லெஜெண்ட்' என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். 

இந்த திரைப்படத்தை உல்லாசம்,. விசில் போன்ற படங்களை இயக்கிய ஜேடி ஜெர்ரி இயக்கினார். கலையான விமர்சனங்களை பெற்று இந்த திரைப்படத்தில் மறைந்த நடிகர் விவேக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 

இந்நிலையில் லெஜன்ட் சரவணன் அவரது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், புதிய திரைப்படத்தில் பணிகள் தொடங்கியுள்ளதாகவும் அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. 

மேலும் இந்த படத்தை துரை செந்தில்குமார் இயக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் துரை செந்தில் குமார் காக்கி சட்டை, எதிர்நீச்சல், கொடி போன்ற படங்களை இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Legend Saravanan New Movie Update


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->