லலித் குமாருக்கு திரையரங்கு உரிமையாளர்கள் எதிரியா?
Leo Lalit Kumar theater owners
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான லியோ திரைப்படம் கடந்த 19ஆம் தேதி உலகம் முழுவதும் 6000 திரையரங்குகளில் வெளியானது.
இதுவரை வெளியான தமிழ் படங்களில் உலகம் முழுவதும் அதிவேகமான வசூலை ஈட்டிய படமாக லியோ உள்ளது. இந்த படம் 7 நாட்களில் ரூ. 461 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது தொடர்பாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தமிழ் சினிமா வரலாற்றில் திரைப்படம் வெளியாகி ஒரு வாரத்தில் அதிக வசூலை குவித்த முதல் இடத்தில் லியோ உள்ளதாக பட குழு தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் திரையரங்க உரிமையாளர்கள் பக்கம் பிரச்சனை எழுந்துள்ளது. இந்த படத்தின் தயாரிப்பாளர் லலித் குமாரின் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் லியோ படத்தை திரையரங்குகளில் வெளியிட 80 சதவீத பங்கீடு தொகையை கேட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
திரையரங்க உரிமையாளர்களிடம் 60 அல்லது 70% தொகையை தொகையை பங்கீட்டாக கொடுக்க ஒப்பந்தம் செய்வார்கள். ஆனால் தீபாவளி வரை வேறு எந்த திரைப்படம் வெளியாவதில்லை என்பதால் லியோ திரைப்படத்திற்கு அதிக பங்கீட்டு தொகை கேட்டு நெருக்கடி செய்வதாக தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்தார்.
இந்நிலையில் லியோ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ வசூல் தொடர்பாக திருப்பூர் சுப்பிரமணியம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், 'எந்த கணக்கை வைத்து லலித்குமார் இந்த வசூலை குறிப்பிடுகிறார் என தெரியவில்லை.
இந்த படத்திற்கு விடுமுறை நாட்களில் மட்டுமே கூட்டம் உள்ளது. கொரோனாவுக்கு பின் ஓடிடி செல்லாமல் நேரடியாக திரையரங்கிற்கு வந்ததால் மட்டுமே 'மாஸ்டர்' படத்திற்கு 80 சதவீத பங்கீட்டை கொடுத்தோம்.
தமிழ் சினிமா வரலாற்றில் இந்த அளவிற்கு வேறு எந்த படத்திற்கும் ஒப்பந்தம் போடவில்லை. ஆனால் லியோ திரைப்படத்திற்கும் 80 சதவீதம் கேட்டு எங்களுக்கு நெருக்கடி கொடுத்ததால் வேறு வழியில்லாமல் படத்தை திரையிட்டோம்.
லியோ திரைப்படத்தால் திரையரங்க உரிமையாளர்களுக்கு எந்த ஒரு லாபமும் இல்லை. லலித் குமார் என்னை தொடர்பு கொண்டு உங்களது இஷ்டத்திற்கு நேர்காணலில் பேசுகிறீர்கள் என கேள்வி கேட்டார். இந்த அளவிற்கு பங்கீட்டு தொகை கேட்டால் வேறு என்ன செய்ய வேண்டும்' என தெரிவித்துள்ளார்.
English Summary
Leo Lalit Kumar theater owners