'லியோ' அதிகாலைக் காட்சி: அனுமதி வழங்கிய தமிழக அரசு! - Seithipunal
Seithipunal


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'லியோ' இந்த திரைப்படத்தின் டிரைலர் கடந்த 5 ஆம் தேதி வெளியானது. 

ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்ற டிரைலரில் கவனம் இருக்கும் சண்டை காட்சிகளும் விஜய்யின் இருவேறு வித்தியாசமான தோற்றங்களும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

அதே சமயத்தில் டிரைலரில் விஜய் பேசிய தகாத வார்த்தை மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது. யூட்டுயூபில் வெளியான ட்ரெய்லரில் குறிப்பிட்ட அந்த வார்த்தை மியூட் செய்யப்பட்டுள்ளது. 

மேலும் தமிழக அரசிடம், தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் லியோ படத்தினை அதிகாலை காட்சியில் வெளியிட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தது. 

இந்நிலையில் தமிழக அரசு, அக்டோபர் 19ஆம் தேதி அதிகாலை 4 மணி காட்சிக்கு அக்டோபர் 19ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை காலை 7:00 மணி காட்சிக்கு அனுமதி அளித்துள்ளது. 

இந்த மூலம் ஒவ்வொரு நாளும் 5 காட்சிகள் வரை திரையிடும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Leo morning scene Tamil Nadu government given permission


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->