லியோ ரிலீஸ்: தீவிர கண்காணிப்பில் சிறப்பு குழுக்கள்! சென்னை காவல் ஆணையர் அதிரடி! - Seithipunal
Seithipunal


சென்னையில் லியோ திரைப்படம் திரையிடுதலில் விதிமுறைகளை மீறும் திரையரங்குகளை கண்காணிக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் லியோ. இந்த படத்தில் திரிஷா, அர்ஜுன், கௌதமேனன், சஞ்சய் தத் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். 

இந்த படம் வருகின்ற 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் படத்தின் டிரைலர் கடந்த வாரம் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. 

இந்நிலையில் தமிழக அரசு லியோ சிறப்பு காட்சிகள் அதிகாலை முதலில் திரையிடுவதற்காக புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. 

அதன்படி, 'லியோ சிறப்பு காட்சி காலை 9 மணி முதல் தான் தொடங்க வேண்டும். இறுதி காட்சி நள்ளிரவு 1.30 மணிக்கு முடிக்கப்பட வேண்டும். 

அக்டோபர் 19ஆம் தேதி முதல் 6 நாட்களுக்கு லியோ படத்தின் சிறப்பு காட்சிகள் திரையிடலாம். 6 நாட்களிலும் 5 காட்சிகள் மட்டுமே திரையிட வேண்டும் என தமிழக அரசு பிறப்பித்துள்ளது. 

அரசு விதிமுறைகளின்படி ரசிகர்களுக்கு உரிய பாதுகாப்பு வாகன நிறுத்த வசதி உள்ளிட்ட உள்ளடவை செய்து தர வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இதற்கிடையே சிறப்பு காட்சி திரையிடுவதில் விதி மீறல்கள் நடைபெறாமல் இருப்பதை கண்காணிக்க அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களும் சிறப்பு குழு அமைக்க முதன்மை செயலாளர் உத்தரவு பிறப்பித்தார். 

சென்னையில் லியோ திரைப்படம் திரையிடுவதில் விதிமுறைகளை மீறும் திரையரங்குகளில் கண்காணிக்க சென்னை பெருநகர் காவல் துறை சார்பில் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Leo Release Chennai Police Commissioner Action


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->