சர்ச்சையை கிளப்பிய விஜய்யின் தகாத வார்த்தை: முற்றுப்புள்ளி வைத்த லோகேஷ் கனகராஜ்!  - Seithipunal
Seithipunal


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'லியோ'. இந்த படத்தின் டிரைலர் அக்டோபர் 5 ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. 

கவனம் இருக்கும் சண்டை காட்சிகளும் விஜய்யின் இரு வித்தியாசமான தோற்றமும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

இந்த படத்தின் டிரைலர் இதுவரை 41 மில்லியன் பார்வையாளர்களை கடந்து ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது. 

அக்டோபர் 19ஆம் தேதி திரைக்கு வருகின்ற இந்த படத்தின் டிரைலரில் நடிகர் விஜய் தகாத வார்த்தை ஒன்றை பேசி இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

பெண்களை இழிவுபடுத்தும் இந்த வார்த்தை விஜய் பேசியிருக்கக் கூடாது என்றும் குழந்தை ரசிகர்களை வைத்திருக்கும் இவரிடம் இருந்து இதனை எதிர்பார்க்கவில்லை எனும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். 

இந்நிலையில் லியோ பட நேர்காணல் ஒன்றில் லோகேஷ் கனகராஜ் இந்த சர்ச்சை பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அப்போது அவர் தெரிவித்திருப்பதாவது, 'விஜய் பேசியுள்ள அந்த வார்த்தை திரையரங்குகளில் மியூட் செய்யப்பட்டு தான் வெளியாகும். 

விஜய் அண்ணா முதலில் இந்த வார்த்தையை பேச வேண்டாம் என்றுதான் கேட்டுக்கொண்டார். நான் தான் கதைக்கு தேவை என வற்புறுத்தி பேச வைத்தேன். 

யூ டியூபில் தணிக்கை கிடையாது. திரையரங்குகளில் வெளியாக போவதில்லை. இது யார் மனதையும் புண்படுத்த எடுக்கவில்லை. 

கதைக்கு தேவைப்பட்டது. படம் பார்க்கும்போது புரியும். இந்த சர்ச்சைக்கு நான் முற்றிலும் பொறுப்பேற்க்கிறேன். இந்த வார்த்தை நடிகர் விஜய் பேசியது கிடையாது. பார்த்திபன் என்னும் கதாபாத்திரம் பேசுவது அவ்வளவுதான்'' என்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Leo Trailer Vijay inappropriate words  Lokesh Kanagaraj put end 


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->