திராவிடம் என்றால் என்ன? முதலமைச்சர் ஸ்டாலின் புது விளக்கம்!
Minister Ponmudi CM Stalin Book Launch
சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற அமைச்சர் பொன்முடி ஆங்கிலத்தில் எழுதிய "The Dravidian Movement and the Black Movement" நூலின் தமிழாக்கமான "திராவிட இயக்கமும் கருப்பர் இயக்கமும்" நூல் வெளியிட்டு விழாவில் முதலமைச்சர் முக ஸ்டாலின் நூலினை வெளியிட்டார்.
பின்னர் நிகழ்ச்சியில் முதலமைச்சர் முக ஸ்டாலின் பேசியாதவது, "திராவிடம் என்ற சொல்லை கேட்டாலே சிலருக்கு அச்சமாக உள்ளது. ஆரியத்தை பதம் பார்க்கும் சொல்.
அடிமைத்தனத்தை ஒழிப்பதற்காகவே, திராவிட இனமும், கருப்பர் இனமும் தோன்றியது. 'திராவிட நல் திருநாடு' என்று பாடினால் நாக்கு தீட்டாகிவிடுமா?
'திராவிட நல் திருநாடு' என்று பாடினால் உங்களுக்கு எறியும் என்றால், நாங்கள் திரும்ப திரும்ப படுவோம்.
கலைஞரால் பட்டை தீட்டப்பட்டவர் பொன்முடி. அதனால்தான் தனது செயல்பாடுகளால் மின்னுகிறார். ஆழ்கடலில் கண்டெடுத்த நன்முத்து பென்முடி. அறிவுமுடிதான் பொன்முடி" என்று முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார்.
English Summary
Minister Ponmudi CM Stalin Book Launch