கல்யாண பொண்ணா மாறிய லாஸ்லியா.! ஒருவார்த்தை சொல்லுங்க.. விறுவிறுப்பான ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமடைந்தவர் தான் இலங்கை செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா. 

இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் லாஸ்லியாவுக்கு நிறைய ரசிகர் கூட்டம் ஏற்பட்டது. தொடர்ந்து நடிகை லாஸ்லியா நிறைய படங்களில் கமிட்டாகி வருகிறார். 

தற்போது மலையாளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் என்ற திரைப்படம் தமிழில் கூகுள் குட்டப்பன் என்று ரீமேக் செய்யப்படுகிறது. இதனை கேஎஸ் ரவிக்குமார் தயாரித்திருக்கிறார்.

லாஸ்லியா மற்றும் தர்ஷன் இருவரும் இணைந்து நடித்துள்ள இந்த திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. இந்த படம் மே 6ஆம் தேதி ரிலீசாக உள்ளதாக தற்போது அறிவிப்பு வெளியாகவுள்ளது.

இந்நிலையில் நடிகை லாஸ்லியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மணக்கோலத்தில் இருப்பது போல மேக்கப் செய்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். இதை கண்ட ரசிகர்கள், "ம்ம் என்று ஒரு வார்த்தை சொல்லுங்க. இப்போதே உங்கள கட்டிக்கிறேன்." என்று கமெண்ட் போட்டு சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

losliya marriage get up photoshoot 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->