''லக்கி பாஸ்கர்'' திரைப்படத்தின் முதல் பாடல் ரிலீஸ் அப்டேட்.! - Seithipunal
Seithipunal


நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் இறுதியாக வெளியான கிங்காங் கோதா திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது. 

இதனை தொடர்ந்து கமலஹாசன் நடிப்பில் உருவாகி வரும் தக் லைஃப் திரைப்படத்தில் துல்கர் சல்மான் நடித்த ஒப்பந்தமாகி பின்னர் சில காரணங்களால் அந்த திரைப்படத்திலிருந்து விலகினார். 

இதற்கிடையே வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் புதிய திரைப்படம் ஒன்று உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் மீனாட்சி சவுத்ரி கதாநாயகியாக நடித்துள்ளார். 

ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்த திரைப்பட டீஸர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. ''லக்கி பாஸ்கர்'' என பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் 'லக்கி பாஸ்கர்' திரைப்படத்தின் முதல் பாடல் ப்ரோமோ இன்று வெளியாக உள்ளதாகவும் முழு பாடல் வருகின்ற ஜூன் 19ஆம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இந்த அறிவிப்பாளர் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பிலும் உற்சாகத்திலும் உள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Lucky Bhaskar Movie First Song Release Update


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->