மகாராஜா ஓடிடி ரிலீஸ் - மாஸ் அப்டேட் கொடுத்த படக்குழு.! - Seithipunal
Seithipunal


இயக்குனர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த மகாராஜா திரைப்படம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதியுடன் மம்தா மோகன்தாஸ், அபிராமி, திவ்ய பாரதி, அனுராக் காஷ்யப், சிங்கம் புலி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

பெண் பிள்ளைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் ரீதியான வன்கொடுமையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படம் இதுவரை இந்த படம் ரூ. 81 கோடி வசூலை குவித்துள்ளது. கூடிய விரைவில் இந்த படம் 100 கோடி வசூலை பெற்றுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

படம் வெளியானது முதல் தற்போது வரை பொதுமக்கள் திரையரங்குகளுக்குச் சென்று பார்த்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில், மகாராஜா திரைப்படம் எப்போது ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று ரசிகர்கள் காத்திருந்த நிலையில், தற்போது ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

அதாவது, வரும் 19ஆம் தேதி பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸில் மகாராஜா திரைப்படம் வெளியாகவுள்ளது என்று படக்குழு தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

maharaja movie ott release date announce


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவின் வாக்குகள் யாருக்கு செல்லும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவின் வாக்குகள் யாருக்கு செல்லும்?




Seithipunal
--> -->