#BREAKING:: பெரும் சோகம்.. பழம்பெரும் மலையாள நடிகர் மாமுக்கோயா காலமானார்..!! - Seithipunal
Seithipunal


மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மாமுக்கோயா நாடக கலைஞராக தனது வாழ்க்கையை தொடங்கி திரையுலகில் அடி எடுத்து வைத்து காமெடி நடிகராக பிரபலமானவர். மலையாளத்தில் 450-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள மாமுக்கோயா இரண்டு முறை கேரள மாநில அரசின் விருதுகளை பெற்றுள்ளார்.

தற்பொழுது இவருக்கு 76 வயதாகும் நிலையில் நேற்று மலப்புரத்தில் நடைபெற இருந்த கால்பந்து தொடரை தொடங்கி வைப்பதற்காக வந்திருந்தார். அப்பொழுது அவருடைய ரசிகர்கள் செல்பி எடுப்பதற்காக அவரை சூழ்ந்த போது அசௌகரியமாக இருப்பதாக கூறியதோடு கால்பந்து மைதானத்தில் சரிந்து விழுந்தார்.

இதனைத் தொடர்ந்து அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக ஐசியூவில் அனுமதிக்கப்பட்டார். அவருடைய உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் நேற்று தெரிவித்தனர். இந்த நிலையில் நடிகர் மாமுக்கோயா சிகிச்சை பலனின்றி சற்று முன் உயிரிழந்துள்ளார். இவரின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் அவருடைய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Malayalam actor Mamukoya passed away


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->