திபெத் நிலநடுக்கத்தில் பலியான 126 பேர் மற்றும் குடும்பத்தினருக்கு, இந்திய அரசு இரங்கல்..! - Seithipunal
Seithipunal


திபெத்தில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில், சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 126 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், திபெத் நிலநடுக்கத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு இந்தியா இரங்கல் தெரிவித்துள்ளது.

குறித்த  நிலநடுக்கம், காலை 6.35 மணிக்கு திபெத்தில் உள்ள மலைப்பகுதியில் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கத்தின் மையப்புள்ளி இருந்தது. இதனால் திபெத், நேபாள நாடுகள் நிலநடுக்கத்தில் குலுங்கின.

இந்த பயங்கர நிலநடுக்கம் ரிக்டரில் 7.1 ஆக பதிவானது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. இதனால், திபெத்தின் ஷிகாட்சே நகரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

குறித்த, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மீட்புப்படையினர் விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர். இடிந்த வீடுகளில் சிக்கியவர்களை மீட்டனர். 

இதுதொடர்பாக, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், திபெத் தன்னாட்சிப் பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் ஏற்பட்ட துயரமான உயிர் மற்றும் உடைமை இழப்புகளுக்கு இந்திய அரசும் மக்களும் இரங்கல் தெரிவிக்கின்றனர்.

அத்துடன், எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும், பாதிக்கப்பட்டவர்களுடனும் அவர்களது குடும்பத்தினருடனும் உள்ளன என ரன்தீர் ஜெய்ஸ்வால் பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The Government of India condoles the loss of 126 lives in the Tibet earthquake


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->