படக்குழுவுக்கு உணவளித்த மம்மூட்டி.. இணைந்து கொண்ட ஜோதிகா.!  - Seithipunal
Seithipunal


கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர்தான் ஜோதிகா. திருமணத்திற்கு பின்னர் பல வருடங்கள் சினிமாவில் நடிக்காமல் ஜோதிகா இருந்தார். சமீப காலமாக கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் இருக்கின்ற கண்ணியமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். 

தற்போது அவரது பிறந்தநாளை முன்னிட்டு "காதல் த கோர்" என்ற மலையாள படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது. நடிகர் மம்மூட்டி ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். 

மம்மூட்டி தான் இந்த படத்தை தயாரிக்கிறார். இதனை ஜோ பேபி இயக்க ஜோதிகா ஹீரோயினாக நடிக்கிறார். இந்த திரைப்படத்தில் நடிப்பதன் மூலம் ஜோதிகா 13 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் மலையாளத்தில் நடிக்க இருக்கிறார். இதற்கு முன்பு ஜோதிகா 2 மலையாள படங்களில் மட்டும் நடித்துள்ளார். 

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில், வெளியாகியது. இந்த நிலையில் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் இன்று மம்மூட்டி படக்குழுவினருக்கு உணவு பரிமாறினார்.  அப்போது அவருடன் சேர்ந்து நடிகை ஜோதிகாவும் உணவு பரிமாறினார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mammootti and jothika serve food


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->