நடிகர் சங்க தலைவரான விஷால் அப்படி சொல்லக்கூடாது - மன்சூர் அலிகான்!
Mansour Alikhan speech goes viral
தமிழ் திரையுலகில் பிரபல வில்லனாக வலம் வரும் மன்சூர் அலிகான் 'சரக்கு' திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
ஜெயக்குமார் இயக்கத்தில் வலினா பிரின்ஸ் கதாநாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் நாஞ்சில் சம்பத், மொட்டை ராஜேந்திரன், வினோதினி, ரவி மரியா, மதுமிதா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது.
அப்போது மன்சூர் அலிகான் தெரிவித்திருப்பதாவது, ''நடிகர் விஷால் சின்ன படங்களை எடுத்துக்கொண்டு வராதீர்கள் நஷ்டம் ஏற்படும் என சொன்னது தவறு.
அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நடிகர் சங்க தலைவரான விஷால் அப்படி சொல்லக்கூடாது. ஏதோ அவர் அனுபவத்தில் சொல்கிறார்.
ரூ. 100 கோடி செலவில் விஷாலை வைத்து தான் படம் எடுக்க வேண்டுமா. நடிகர் சங்கத்தில் வேலை இல்லாமல் லட்சக்கணக்கானோர் இருக்கிறார்கள். அவர்களுக்கு வேலை எப்படி கிடைக்கும்.
சித்தார்த் நடிப்பில் உருவான 'சித்தா' என்ற படம் ரூ. 3 கோடி செலவில் எடுக்கப்பட்டது தான். ஆனால் அது நன்றாக ஓடியது. அதுபோலத்தான் ரூ. 50 லட்சம் கொண்டு சமூகத்தால் வரவேற்கும்படி ஒருவர் படத்தை கொடுக்கலாம்.
அதனால் நடிகர் விஷால் தெரிவித்த கருத்து தவறு. பான் இந்தியா திரைப்படமாக எடுத்தால் மட்டும்தான் சினிமா பார்க்க வேண்டும் என்பது இல்லை.
'சரக்கு' மிகச்சிறந்த திரைப்படம் நல்லா இருக்கிறது என சொல்லிவிட்டார்கள். ஆனால் தணிக்கை குழுவில் அம்பானி சொல்லாதே அதானி சொல்லாதே என தெரிவிக்கின்றனர்'' என்றார்.
English Summary
Mansour Alikhan speech goes viral