மீண்டும் இணையும் கர்ணன் கூட்டணி.. உற்சாகத்தில் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


தமிழ் திரைப்பட துறையில் துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் தனுஷ். அதனை தொடர்ந்து தனது திறமையான நடிப்பினால் தமிழ் சினிமாவில் தனக்கென தனியிடத்தை பிடித்துள்ளார்.

ஆரம்பம் முதலே சிறந்த நடிப்பை வழங்கி ரசிகர்களை கவர்ந்தவர். அந்த வகையில் புதுப்பேட்டை, ஆடுகளம், வட சென்னை, அசுரன், கர்ணன் உள்ளிட்ட திரைப்படங்களின் நடிப்பு  அனைவராலும் பாராட்டப்பட்டது.

இவரது நடிப்பில் கடைசியாக வெளியான திருச்சிற்றம்பலம் மற்றும் வாத்தி திரைப்படம் ரூ.100 கோடிக்கும் மேல் வசூலை பெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து தற்போது இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தனுஷின் அடுத்த படத்தை இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த படத்தை தனுஷின் Wonderbar Films மற்றும் Zee Studios 2 நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கிறது.

ஏற்கனவே, இயக்குனர் மாரி செல்வராஜ் - தனுஷ் கூட்டணியில் வெளியான கர்ணன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mari selvaraj direct again dhanush


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->