திரையரங்குகளில் வெளியாகவுள்ள மாஸ்டர் படம்.! ஒட்டப்படும், 'மாஸ்டர்' போஸ்டர்.!  - Seithipunal
Seithipunal


இந்தியாவில் வெளியாகின்ற பல படங்கள் ஜப்பானில் வெளியிடப்படுவது வழக்கம். ஜப்பான் ரசிகர்களிடம் ரஜினிகாந்தின் முத்து திரைப்படத்திற்கு பலத்த வரவேற்பு கிடைத்தது. எனவே, அவர் நடித்த பல படங்கள் ஜப்பான் மொழியில் வெளியிடப்பட்டது.

கார்த்தி நடித்த கைது திரைப்படம் சமீபத்தில் ஜப்பானில் வெளியிடப்பட்டது. தொடர்ந்து, ராஜமவுலி இயக்கிய ஆர் ஆர் ஆர் திரைப்படம் சில நாட்களுக்கு முன் ஜப்பானில் வெளியிடப்பட்டது. இந்த திரைப்படம் வெளியாகி முதல் நாளிலேயே அங்கு ஒரு கோடி வசூல் செய்தது. 

இத்தகைய சூழலில், கடந்த வருடம் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் தான் மாஸ்டர். இந்த படமும் தற்போது ஜப்பான் மொழியில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாக இருக்கிறது. 

அடுத்த மாதத்தில் ஜப்பானில் இருக்கும் நூற்றுக்கணக்கான தியேட்டர்களில் மாஸ்டர் படம் வெளியாக இருக்கிறது. இதற்காக ஜப்பான் நகரம் பலவற்றிலும் வாசகங்களுடன் கூடிய மாஸ்டர் பட போஸ்டர் ஒட்டப்பட்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

master movie in japan


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->