இனிமேல் படம் நடிக்க வாய்ப்பில்லை - உதய ஸ்டாலின் பரபரப்பு பேட்டி.!! - Seithipunal
Seithipunal


இனிமேல் படம் நடிக்க வாய்ப்பில்லை - உதய ஸ்டாலின் பரபரப்பு பேட்டி.!!

இயக்குனர் மாறி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள படம் மாமன்னன். இந்த படம் பல்வேறு எதிப்புகளுக்கு மத்தியில் நேற்று வெளியானது. இந்த படத்தை படக்குழுவினர் சென்னை சத்யம் திரையரங்கில் பார்த்து ரசித்தனர். 

அதில், படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜும், நடிகர் மற்றும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், நடிகை கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும், இவர்களுடன் உதயநிதியின் மனைவியும், இயக்குநருமான கிருத்திகா உதயநிதியும் தனது குடும்பத்தினருடன் வந்திருந்தார்.

திரைப்படம் முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 'மாமன்னன்' படத்தின் இந்த முழு வெற்றியும் இயக்குனர் மாரி செல்வராஜையே சேரும். படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி. மிகவும் கஷ்டப்பட்டு இந்த படத்தை எடுத்தோம். எனது கடைசி படமான இந்த படமே எனக்கு முழுவதுமாக பூர்த்தி செய்தது. இதற்கு மேல், படம் நடிக்க வாய்ப்பில்லை. 

இந்த ஒரு படத்தில் நாங்கள் சமுதாயத்தை திருத்த போகிறோம் என்று சொல்லவில்லை. எங்கள் வலியை சொல்கிறோம், அதை மக்கள் புரிந்து உணர வேண்டும். அதற்கு இந்த அரசாங்கம் எப்போதும் துணை நிற்கும். நிறைய வேலைகள் இருக்கிறது. இனிமேல் படங்கள் நடிப்பதில் வாய்ப்பில்லை" என்று தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister and actor uthayanithi stalin press meet after watchig mamannan movie


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->