அதிக விலைக்கு லியோ பட டிக்கெட் - எச்சரிக்கை விடுத்த அமைச்சர்.!
minister mp saminathan warning for raised leo movie ticket price
விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், உருவாகியுள்ள லியோ திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தத் திரைப்படம் பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே வெளியாக உள்ள நிலையில், பல இடங்களில் டிக்கெட் விலைகள் மிகவும் அதிகரித்து விற்பனை செய்யப்படுவதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.
சில இடங்களில் போலி டிக்கெட்டுகளும் விற்பனையாவதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்த நிலையில் லியோ திரைப்படம் குறித்து தமிழ்நாடு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கருத்துத் தெரிவித்துள்ளார்.
அதாவது, "லியோ படத்தின் டிக்கெட்டுகளை அதிக விலைக்கு விற்றால், கடுமையான நடவடிக்கை பாயும். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கூடிய அதிகாரம், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு முறையும் பெரிய நடிகர்களின் படம் வெளியாகும் போதும் அதிக விலைக்கு பிளாக்கில் டிக்கெட் விற்கும் விவகாரம், தலை தூக்குகிறது. அதனை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது" என்று அவர் தெரிவித்துள்ளார்.
English Summary
minister mp saminathan warning for raised leo movie ticket price