சுபமுகூர்த்த தினம் - தமிழகத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்க முடிவு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் முக்கிய தினங்களில் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளை விட கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகிறது. அந்த வகையில், தற்போது வார விடுமுறை மற்றும் சுபமுகூர்த்த தினங்களை முன்னிட்டு கூடுதல் பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் தெரிவித்து இருப்பதாவது:-

"சுபமுகூர்த்தம் மற்றும் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, நெல்லை, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட இடங்களுக்கு 31-ந் தேதி 365 பேருந்துகளும், பிப்ரவரி 1-ந் தேதி 445 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதேபோல், சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 31-ந் தேதி வெள்ளிக்கிழமை 60 பேருந்துகளும் பிப்ரவரி 1-ந் தேதி சனிக்கிழமை 60 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

மேலும், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோவை ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 250 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதவரத்தில் இருந்து 31-ந் தேதி 20 பேருந்துகளும் பிப்ரவரி 1-ந் தேதி 20 பேருந்துகளும் சிறப்பு பேருந்துகளாக இயக்கப்படுகிறது.

தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது" என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

extra bus run in tamilnadu for weekly holiday


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->