தர்ஷா குப்தா ஆடை குறித்து சதீஷ் பேச்சு சர்ச்சை.! பிரபல இயக்குனர் ஆதரவு.! - Seithipunal
Seithipunal


நடிகர் சதீஷ் நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் தான் ஓ மை கோஸ்ட் இந்த படம் ஆர்.யுவன் இயக்கத்தில் உருவாகி இருக்கிறது. இதில் நடிகை தர்ஷா குப்தா, சன்னி லியோன், ரமேஷ் திலக் மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர். 

இந்த திரைப்படத்தில் சன்னி லியோன் ஹீரோயினாக நடித்துள்ளார். இந்தியா வம்சாவளியான சன்னி லியோன் 2012 முதல் நிறைய பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். தமிழில் ஜெய் நடித்த வடகறி படத்தின் பாடலுக்கு நடனமாடி இருக்கிறார். இந்நிலையில் அவரது நடிப்பில் ஓ மை கோஸ்ட் திரைப்படம் வெளியாக இருக்கிறதுஓ . 

இந்த திரைப்படத்தின்  ட்ரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட போது சன்னி லியோன் புடவை அணிந்து கொண்டு இருந்தார். ஆனால், தமிழ் நடிகையான தர்ஷா குப்தா லெகங்கா அணிந்திருந்தார். இதை நடிகர் சதீஷ் சுட்டிக்காட்டி எங்கிருந்தோ வந்தவர் கலாச்சாரத்தை காப்பாற்றுகிறார். ஆனால் நம்மூர் பொண்ணு இப்படி இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார். 

இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி பலரிடமும் கண்டனத்தை பெற்று வருகிறது. சிலர், "ஏன் கலாச்சாரத்தை பெண்கள் மட்டும் தான் காப்பாற்ற வேண்டுமா? நீங்களும் வேஷ்டி, சட்டை அணிந்து கொண்டு வந்திருக்கலாமே?" என்று டி-ஷர்ட் ஜீன்ஸ் அணிந்த சதீஷ்ஷை திட்டி வருகின்றனர்.

இந்நிலையில் பிரபல இயக்குனரும், நடிகருமான மூடர் கூடம் நவீன் சதீஷ்க்கு எதிராகவும், தர்ஷா குப்தாவுக்கு ஆதவாகவும் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். அதில், "உங்கள் சகோதரியோ, மனைவியோ என்ன உடை உடுத்த வேண்டும் என்பதை நீங்கள் பேசினால் கூட அது தவறுதான். அப்படி இருக்க பெண்களின் தனிப்பட்ட உரிமையை முடிவு செய்ய நீங்கள் யார்?" என்று தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

moodarkoodam naveen against sathish


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->