உலக அளவில் ரூ.3,200 கோடி வசூல் சாதனை செய்த முபாசா : 'தி லயன் கிங்'..! - Seithipunal
Seithipunal


பேரி ஜென்கின்ஸ் ( Barry Jenkins ) இயக்கத்தில் பிரம்மாண்டமான பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம் முபாசா : தி லயன் கிங் (Mufasa: The Lion King)  இப்படம் கடந்த 20-ந் தேதி வெளியானது.

1994-ஆம் ஆண்டு வெளியான ‘கல்ட் கிளாசிக்’ கார்ட்டூன் படமான ’தி லயன் கிங்’ உலகமெங்கும் பெரும் வரவேற்பை பெற்றது. 2டி அனிமேஷன் வடிவில் இருந்த அந்தப் படத்தை கடந்த 2019-ஆம் ஆண்டு லைவ் ஆக்‌ஷனாக உருவாக்கி வெற்றி கண்டது டிஸ்னி.

தற்போது அப்படத்தின் பிரதான கதாபாத்திரங்களில் ஒன்றான ‘முஃபாஸா’ சிங்கத்தின் கதை தனியாக ‘முஃபாஸா: தி லயன் கிங்’ (Mufasa: The Lion King) என்ற பெயரில் வெளியானது.

அடுத்ததாக, 2019-ஆம் ஆண்டில் 'தி லயன் கிங்' என்ற பெயரில் வெளியாகின. இந்த லயன் கிங் படத்திற்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. காட்டு விலங்களுக்கு இடையே உள்ள பொறாமை, வஞ்சம், சூழ்ச்சி, போராட்டம், பந்தம், காதல், தலைமை என அனைத்து குணாதிசயங்களை காட்டி படத்தை வித்தியாசமான முறையில் கதைக்களத்தோடு வெளியிட்டது  முக்கிய அம்சமாகும்.

இந்த படத்தில் முபாசா கதாபாத்திரத்திற்கு அர்ஜுன் தாஸ் குரல் கொடுத்திருந்தார். மேலும் அசோக் செல்வன், நாசர், விடிவி கணேஷ், சிங்கம் புலி, ரோபோ ஷங்கர் என பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களுக்கு குரல் கொடுத்திருந்தனர். இந்தியில் ஷாருக்கானும், தெலுங்கில் மகேஷ் பாபுவும் குரல் கொடுத்துள்ளனர்.

இந்த முபாசா : தி லயன் கிங் படம் சூழ்ச்சியால் கொலை செய்யப்படும் சிம்பாவின் தந்தை முபாசா கடந்து வந்த பாதையை வைத்து உருவாகியுள்ளது.

அரச குடும்பத்தை சாராது, அனாதையாக வளர்ந்து தனக்கான ஆட்சியை உருவாக்கும் முபாசாவின் கதை மெய்சிலிர்க்க வைக்கிறது.

இந்த நிலையில், இப்படம் உலக அளவில் ரூ.3,200 கோடி வசூல் செய்துள்ளது. குறிப்பாக இந்தியாவில் மட்டும் 16 நாட்களில் சுமார் ரூ.150 கோடி வசூலித்துள்ளது. குறிப்பாக தமிழ் நாட்டில் மட்டும் ரூ.23 கோடி வசூல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mufasa The Lion King sets a record of Rs 3200 crores worldwide


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->