தமிழகத்தில் இடைத்தேர்தல்: இன்று தேர்தல் ஆணையம் அறிவிக்கப்போகும் முக்க்கிய அறிவிப்பு!
Erode east By poll date announce may be today
தலைநகர் டெல்லிக்கு வரும் பிப்ரவரி மாதம் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடத்த அதிக வாய்ப்பு உள்ள நிலையில், கடந்த ஒரு மாதமாகவே தேர்தல் பிரச்சாரத்தை அரசியல் காட்சிகள் தொடங்கியுள்ளன.
குறிப்பாக ஆளும் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களை அறிவித்து தனித்து களமிறங்கியுள்ளது. இதேபோல் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன.
இந்நிலையில், டெல்ல சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் தேதி இன்று பிற்பகல் 2 மணிக்கு அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதேபோல், தமிழகத்தின் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தலுக்கான தேதி இன்று அறிவிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தலுக்கான திமுக கூட்டணி வேட்பாளர் யார் என்ற கேள்வி இன்னும் முடிவாகவில்லை. மீண்டும் காங்கிரஸ் போட்டியிடுகிறதா? இல்லை திமுக போட்டியிடுகிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
English Summary
Erode east By poll date announce may be today