இரங்கல் தீர்மானத்துடன் ஒத்திவைக்கப்பட்ட சட்டப்பேரவை! - Seithipunal
Seithipunal



இன்று தமிழக சட்டப்பேரவையில் மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

நேற்று தொடங்கிய சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் ஐந்து நாள்கள் கூட்டங்கள் நடைபெறும் என்று அவைத்தலைவர் அறிவித்திருந்தார். தினமும் காலை 9.30 மணிக்கு பேரவை கூடும் என்றும், கேள்வி நேரம் சீரிய முறையில் நடைபெறும் என அப்பாவு தெரிவித்திருந்தார்.  

முதல் நாளான நேற்று ஆளுநர் உரையை வாசிக்காமல் வெளிநடப்பு செய்ய, பின்னர் ஆளுநர் உரையை அவைத்தலைவர் அப்பாவு வாசித்தார்.

இன்று இரண்டாவது நாள் கூட்டத்தில் மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானங்களை அவைத்தலைவர் அப்பாவு வாசித்தார்.  

இரங்கல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதையடுத்து, பேரவை இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.  
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN Assemably 7 jan 2025


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->