என்ன தைரியம் சார் உங்களுக்கு? நந்தன் இயக்குனரை பாராட்டி தள்ளிய ரஜினிகாந்த்! - Seithipunal
Seithipunal


நந்தன் திரைப்பட இயக்குனரை தொலைபேசி மூலம் அழைத்து நடிகர் ரஜினிகாந்த வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நந்தன் படத்தின் இயக்குனர் இரா.சரவணன் தெரிவிக்கையில், "அறிமுகம் இல்லா எண்ணிலிருந்து அழைப்பு… “சரவணன் சாருங்களா…? ரஜினி சார் ‘நந்தன்’ படம் பார்த்தார். இப்போ உங்ககிட்ட பேசுவார்” என்றார்கள். ரோட்டில் நின்ற நான் எப்படி என் அலுவலக அறைக்குள் ஓடிவந்து கதவைச் சார்த்திக் கொண்டேன் என்பதுகூடத் தெரியாது. போன் வந்தது. பூவைத் தொடுவதுபோல் போனை தொட்டேன். 

“டைரக்டர் சார்… நான் ரஜினிகாந்த் பேசுறேன். உங்க ‘நந்தன்’ படம் பார்த்தேன்… கையைப் பிடித்து அழைத்துக் கொண்டுபோய்க் காட்ட நான் தயார்னு சொல்லி இருக்கீங்க… என்ன கட்ஸ் சார்…” எனப் பேசத் தொடங்கியவர், படபட வேகத்தில் படத்தின் மொத்த விஷயங்களையும் பாராட்டித் தள்ளினார். 

சசிகுமார், தொண்டன்கனி, பாலாஜிசக்திவேல் உள்ளிட்ட அத்தனை பேர் நடிப்பையும் குறிப்பிட்டுப் பாராட்டினார். மின்னலைப் படம் பிடிக்க முடியாததுபோல், பட்படார் பட்டாசாகத் தெறித்துவிழுந்த அவர் வார்த்தைகளை என்னால் சரிவர நினைவுகூரக்கூட முடியவில்லை. 

ஒரு பனித்துளியைச் சுண்டி வீசுவதுபோல் மொத்த பாரங்களையும் வாழ்த்து வார்த்தைகளால் துடைத்தெறிந்தார் சூப்பர் ஸ்டார். 

‘நந்தன்’ என்னும் எளியவன் தலைக்குக் கிரீடமாகி இருக்கிறது ரஜினி சாரின் வாழ்த்து…" என்று நெகிழ்ச்சியுடன் இயக்குனர் இரா.சரவணன் தெரிவித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

nandhan Movie Rajnikanth


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->