ஓ.டி.டியில் வெளியானது நந்தன் திரைப்படம்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் 'சுப்ரமணியபுரம்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சசிகுமார். அதன் பின்னர் 'ஈசன்' படத்தை இயக்கிய அவர் நடிப்பதில் கவனம் செலுத்தினார். இறுதியாக அவர் நடிப்பில் வெளியான 'அயோத்தி', 'கருடன்' உள்ளிட்ட திரைப்படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்தன. 

இதையடுத்து 'கத்துக்குட்டி', 'உடன் பிறப்பே' போன்ற படங்களை இயக்கிய இரா.சரவணன் இயக்கத்தில், சசி குமார் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'நந்தன்'. இந்தத் திரைப்படம் நீண்ட இடைவெளிக்கு பிறகு கடந்த 20-ந் தேதி வெளியானது. 

இந்தப் படத்தில் சசிகுமார் இதுவரை நாம் பார்த்திராத தோற்றத்தில் நடித்துள்ளார். இவருடன் ஸ்ருதி பெரியசாமி, சமுத்திரக்கனி, பாலாஜி சக்திவேல் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். 

இந்த நந்தன் திரைப்படம் கிராம பஞ்சாயத்து தேர்தல் மூலம் ஏற்படும் சாதியக் கொடுமைகள் பற்றி அழுத்தமாக பேசியுள்ளது. இந்த நிலையில் இந்தப் படம் அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

nandhan movie released ott


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->