தேம்பி, தேம்பி அழுத லேடி சூப்பர் ஸ்டார்.! காரணத்தை கேட்ட ரசிகர்கள் கடுப்பு.!
nayanthara crying for her daughter in law
சரத்குமார் நடித்து வெளியான ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தற்போது உச்சத்தை அடைந்து இருப்பவர் நடிகை நயன்தாரா. இதனை தொடர்ந்து ரஜினி, அஜித், விஜய் என்று பல முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து தற்போது தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பெயரை எடுத்து இருக்கின்றார்.
அதே நேரம் தன்னுடைய அந்தரங்க வாழ்வில் பல்வேறு சர்ச்சைகளுக்கும் அவர் ஆளானார். இந்நிலையில், தற்போது இயக்குனரான விக்னேஷ் சிவனை காதலித்து வரும் இவர், பிறப்பில் கிறிஸ்துவராக இருந்தாலும் கோவில் கோவிலாக சுற்றி வருகிறார். ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருக்கின்றார்.
![Related image](https://img.seithipunal.com/large/large_naay-31356.jpeg)
இந்நிலையில், தன்னுடைய வாழ்க்கையில் முக்கிய நபர் தன்னை விட்டு பிரிந்ததற்காக ஒரு மணி நேரம் தேம்பித் தேம்பி அழுது இருக்கின்றார். இது குறித்து பேட்டி ஒன்றில் அவர் பேசிய பொழுது எனது வாழ்க்கையிலேயே மிகவும் சந்தோஷமான விஷயம் என்றால் என்னுடைய அண்ணன் மகள் பிறந்ததுதான்.
ஏஞ்சலினா, பிறந்த பின்னர் தான் எனக்கு பட வாய்ப்புகள் அதிகப்படியாக கிடைத்தது. மேலும், பல சந்தோசமான சம்பவங்கள் நடந்தது. கிறிஸ்துமஸ் பண்டிகையின் பொழுது ஏஞ்சலினா தன்னுடன் இருக்காமல் துபாய் சென்றுவிட்டார், அதை நினைத்துதான் ஒரு மணி நேரம் தேம்பி தேம்பி அழுதேன்." என்று அவர் தெரிவித்துள்ளார். இதனை கேட்ட ரசிகர்கள் வெளிநாடு சென்றதற்காக எல்லாம் தேம்பி தேம்பி அழுதேன் என்று கூறுவது கொஞ்சம் ஓவர் தான் என்று தெரிவித்து வருகின்றனர்.
English Summary
nayanthara crying for her daughter in law