காரைக்காலில் பள்ளிக், கல்லூரிகளுக்கு விடுமுறை - இதுதான் காரணமா?
school and colleges leave in karaikkal district for kanthoori festival
ஒவ்வொரு ஆண்டும் காரைக்கால் மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தர்கா ஷரீப் கந்தூரி விழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு நடைபெறும் விழாவுக்கு முன்னேற்பாடுகள் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், காரைக்கால் மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:- "இந்த ஆண்டு காரைக்கால் மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தர்கா ஷரீப் கந்தூரி விழாவை முன்னிட்டு இன்று அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக வரும் சனிக்கிழமை அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும். மேலும், அரசு தேர்வுகள் மற்றும் ஜவஹர்லால் நவோதயா வித்யாலயா நுழைவு தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்" என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
school and colleges leave in karaikkal district for kanthoori festival