98வது ஆஸ்கர் விருது - புதிய விதிமுறை வெளியீடு.!!
new restriction announce oscar award
சினிமாத்துறையில் தலைசிறந்த விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதினை அடைவதே ஒவ்வொரு திரைப்பட கலைஞர்களின் கனவாகவுள்ளது. இத்தகைய ஆஸ்கர் விருது ஒவ்வொரு ஆண்டும் சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் என்று பல்வேறு பிரிவுகளில் வழங்கப்பட்டு வருகிறது.

கடைசியாக கடந்த ஜனவரி மாதம் 97-வது ஆஸ்கர் விழா நடைபெற்றது. அதன் படி அடுத்த ஆஸ்கர் விருது விழாவிற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 98வது ஆஸ்கர் விருது விழா அடுத்தாண்டு மார்ச் மாதம் 15ம் தேதி நடைபெற உள்ளது. இந்த விருதுக்கான பரிந்துரைகள் ஜனவரி 22ம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஆஸ்கர் விருது வழங்கும் தேர்வு குழுவுக்கு புதிய விதிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதாவது, தேர்வு குழுவில் உள்ளவர்கள், பரிந்துரை செய்யப்பட்ட அனைத்து படங்களையும் முழுமையாக பார்க்க வேண்டும் என்று புதிய விதிமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.
English Summary
new restriction announce oscar award